மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட போது எடுத்த படம்.
தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் திருபுவனை வேல் பிஸ்கட்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
- ஒப்பந்தத்தின் நோக்கம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்பத்துறையின் மாணவ-மாணவிகளுக்குதொழிற் சாலை பார்வையிடல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுபயிற்சிகளை கல்லூரியுடன் இணைந்து வழங்குவதாகும்
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் திருபுவனை வேல் பிஸ்கட்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்பத்துறையின் மாணவ-மாணவிகளுக்குதொழிற் சாலை பார்வையிடல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுபயிற்சிகளை கல்லூரியுடன் இணைந்து வழங்குவதாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பில் முதல்வர் மலர்க்கண் மற்றும் வேல் பிஸ்கட்ஸ் சார்பில் அதன் பொது மேலாளர் சந்தோஷ்குமார் கையொப்பமிட்டு ஒப்பந்த பரிமாற்றம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்உ ணவு தொழில் நுட்பத்துறைத் தலைவர் திருச்செல்வம், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவு தொழில் நுட்பத்துறையின் உதவிப்பேராசிரியர்கள் சாந்தலட்சுமி மற்றும் பாக்யா நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.