புதுச்சேரி

கோப்பு படம்.

சிறப்பு அனுமதி பெற்று மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும்

Published On 2023-10-02 08:33 GMT   |   Update On 2023-10-02 08:33 GMT
  • மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தல்
  • மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சென்டாக் கலந்தாய்வு தள்ளிப்போனது.

புதுச்சேரி:

இந்திய மருத்துவ ஆணை யத்தின் உத்தரவின்படி

எம்.பி.பி.எஸ். உட்பட மருத்துவ படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 6, 2-ம் கட்டம் ஆகஸ்ட் 30, 3-ம் கட்டம் செப்டம்பர் 20, இறுதி கலந்தாய்வு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

ஆனால் புதுவையில் முதல்கட்ட கலந்தாய்வுதான் முடிந்துள்ளது. இந்திய மருத்துவ மையத்தின் உத்தரவுப்படி புதுவையில் கவுன்சிலிங்கை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2016-ல் அக்டோபர் 7-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை நடந்தது.

அப்போது செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு மருத்துவம் சேர்ந்த மாணவர்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யானது. மாணவர்கள் நீதிமன்ற போராட்டத்துக்கு பின் மருத்துவம் படித்து முடித்தனர்.

இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சென்டாக் கலந்தாய்வு தள்ளிப்போனது.

எனவே கடந்த காலம் போல மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையா டாமல், இந்திய மருத்துவ மையத்தின் சிறப்பு அனுமதியை பெற்று மருத்துவ கலந்தாய்வுகளை நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News