புதுச்சேரி

அதிகாரிகளிடம் கென்னடி எம்.எல்.ஏ. குடிநீர் பிரச்சனை தீர்க்க கோரி வலியுறுத்திய காட்சி.

சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை அதிகாரிகளிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-08-09 04:19 GMT   |   Update On 2022-08-09 04:19 GMT
  • குடிதண்ணீர் மிகவும் கலங்கிய நிலையில் பச்சை நிறமாக வருவதாக தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
  • அதிகாரிகளின் பதிலால் சமாதானம் அடையாத எம்.எல்.ஏ. நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி அங்குள்ள மூடிகளைத் திறக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி கோலாஸ் நகரில் குடிதண்ணீர் மிகவும் கலங்கிய நிலையில் பச்சை நிறமாக வருவதாக தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் அணுகி நிலைமையை விளக்கினார். அதிகாரிகளின் பதிலால் சமாதானம் அடையாத எம்.எல்.ஏ. நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி அங்குள்ள மூடிகளைத் திறக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதன் பின் தண்ணீர் கலங்கலாக உள்ளதையும், பாசி பிடித்து உள்ளதையும் சுட்டிக்காட்டி உடனடியாக போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள இரு மூடிகளும் உடைந்த நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மக்கள் குடிக்கும் குடிநீர் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பணியில் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறினார்.

அதன் பின் கீழே இறங்கி வந்து தண்ணீர் சேமிக்கும் சம்பையும் ஆய்வு செய்தார். அதிலும் பாசி பிடித்து இருந்ததை சுட்டிக்காட்டினார். உடனே இந்த குறைகளை சரிசெய்து தருவதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உறுதிமொழி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதியின் அவைத்தலைவர் ரவி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மாநில தி.மு.க. இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ஆரோக்கிராஜ், முன்னாள் தொகுதி இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ரவிக்குமார், தி.மு.க. பிரமுகர்கள் அஷ்ரப், நிஷார், தப்பு, இருதயராஜ், காலப்பன், மோரிஸ், ரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News