புதுச்சேரி

நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நலதிட்ட உதவிகள் வழங்கிய காட்சி. 

மணவெளி தொகுதி ஓராண்டு சாதனை மலர்-மத்திய மந்திரி வெளியிட்டார்

Published On 2022-11-06 07:09 GMT   |   Update On 2022-11-06 07:09 GMT
  • மணவெளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஓராண்டில் செய்த பணிகள் குறித்த சாதனை மலரை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டார்.
  • தொகுதி மக்கள் அறியும் வகையில் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்றது.

புதுச்சேரி:

மணவெளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஓராண்டில் செய்த பணிகள் குறித்த சாதனை மலரை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டார்.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு காலத்தில் தொகுதி மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து தொகுதி மக்கள் அறியும் வகையில் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்றது.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார். பின்னர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி முக்கிய பிரமுகர்கள் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News