புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையின் அடையாளமாக மணப்பட்டு பகுதி மாறும்-செந்தில்குமார் எம்.எல்.ஏ. உறுதி

Published On 2022-09-09 09:17 GMT   |   Update On 2022-09-09 09:17 GMT
  • பாகூர் தொகுதி மூ.புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வ நிறுவனம் சார்பில் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மூ.புதுக்குப்பம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, பள்ளியின் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி:

பாகூர் தொகுதி மூ.புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வ நிறுவனம் சார்பில் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வேலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார்

எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தகப்பைகளை மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நடவடிக்கை

மூ.புதுக்குப்பம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, பள்ளியின் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவையின் முக்கிய அடையாளமாக மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், புதுகுப்பம் பகுதி மாறும். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் படகு நிறுத்த தளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறிந்து விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ரூ.40லட்சம் செலவில் தார் சாலை விரைவில் போட ஏற்பாடு நடந்து வருகிறது.

இவ்வாறு செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

விழாவில் கிளப் மகேந்திரா பொதுமேலாளர் மோகன்ராஜ், மனித வள மேலாளர் பிரபு, ஊர் பஞ்சாயத்தார் விஜயபாலு, சக்திவேல், கலை, குமார், மாரி, கலைமணி, ஆளியப்பன், வல்லத்தான், போத்திராஜ் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News