புதுச்சேரி
மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- செவிலிய அதிகாரி பானுமதி வரவேற்றார். மருத்துவ அதிகாரி மேனகா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
செவிலிய அதிகாரி பானுமதி வரவேற்றார். மருத்துவ அதிகாரி மேனகா தலைமை தாங்கினார். சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் கிராமப்புற செவிலியர் மாலினி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. களப்பணியாளர் தினேஷ் நன்றியுரை கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.