புதுச்சேரி

கோப்பு படம்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-09-24 06:08 GMT   |   Update On 2022-09-24 06:08 GMT
  • மதகடிப்பட்டு சந்தை தோப்பில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
  • திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தை தோப்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுகிறது.

புதுச்சேரி:

மதகடிப்பட்டு சந்தை தோப்பில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தை தோப்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுகிறது.

இந்த சந்தையில் மாடுகள் மட்டுமின்றி விவசாயி விலை பொருட்கள், காய்கறி, பழ வகைகள் மற்றும் கருவாடு வகைகள் விற்பனை செய்யப்படுகிறன்றன. இதனை வாங்குவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவார்கள்.

இதற்கிடையே அங்கு வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்க வருபவர்களை வாடிக்கையாளர்களாக்கி 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருபுவனை குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது ஒருவர் லாட்டரி சீட்டு முடிவுகளை செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கலிதீர்த்தாள்குப்பம் சுகுமார் நகரை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(வயது50) என்பதும், இவர் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை பணம் ரூ.7 ஆயிரத்து 700 மற்றும் செல்போன், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News