புதுச்சேரி
அரசு தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் ஸ்மார்ட் டிவி திறப்பு விழா நடந்த போது எடுத்த படம்.
எல்.கே.ஜி. மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
- முருங்கப்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெற்றது.
- பள்ளி துணை ஆய்வாளர் குமார் ஸ்மார்ட் டிவியை மாணவர்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் ஸ்மார்ட் டிவி திறப்பு விழா, கற்றலில் சிறந்து விளக்கிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் குமார் ஸ்மார்ட் டிவியை மாணவர்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆசிரியர் பாரதிராஜா வரவேற்றார். ஆசிரியர் பிரபு நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கீதா, எழிலரசி, அவந்தி, தேவி, அழகம்மாள், பங்கஜவள்ளி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.