விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
விடுதலை சிறுத்தைகள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்
- மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்திராகாந்தி சிலை அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திராகாந்தி சிலை அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் செல்வ நந்தன், அரிமா தமிழன், செந்தமிழ்செல்வன், எழில்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் செந்தமிழ்செல்வன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேருவீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.
போலீசார் அவர்களை நேருவீதியில் தடுத்து மிஷன் வீதியில் திருப்பி அனுப்பினர். ஊர்வலம் ஜென்மராக்கினி கோவில் வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அங்கு தடுப்புகளின் மீது ஏறி தாண்டிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு, முள்ளு, மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
ஊர்வலம், ஆர்ப்பாட்ட த்தில் நிர்வாகிகள் வணங்கா முடி, தலையாரி, பொதினிவளவன், முன்னவன், ஆதவன், செல்வசுந்தரம், கார்முகில், சுடர்வாளன், கார்வேந்தன் மற்றும் கட்சியின் மாநில செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய, மாநில அரசு கள் மின்துறையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து பதாகைகளை ஏந்தி வந்தனர். போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் ஊர்வலம் வந்த வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டசபை வளாகம், கவர்னர் மாளிகையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.