புதுச்சேரி

ஏரி, குளம் தூர் வாரும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அருகில் சுத்துக்கேணி பாஸ்கர், முத்தழகன் உள்ளனர்.

ஏரி-குளம் தூர் வாரும் பணி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-28 08:57 GMT   |   Update On 2022-06-28 08:57 GMT
  • மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
  • உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

புதுச்சேரி:

மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் குளம், செட்டிப்பட்டு ஊத்துக்குட்டை குளம், மணலிப்பட்டு செஞ்சி குளம், மற்றும் திருக்கனூர் பெரிய ஏரி ஆகியவற்றை சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை அந்தந்த கிராமங்களில் நடைபெற்ற விழாக்களில் அமைச்சர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி கள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., அருள் முருகன், முத்தழகன், தமிழ்மணி, செல்வகுமார், காட்டேரிக்குப்பம் ராஜா அ.தி.மு.க. பிரமுகர் சுத்துக்கேணி பாஸ்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News