புதுச்சேரி

தானாம்பாளையத்தில் உள்ள பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் புட்லாயம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த காட்சி.

null

5 கோவில்களில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-17 15:22 IST   |   Update On 2022-06-17 17:06:00 IST
  • 15-ந் தேதி காலை கணபதி பூஜையுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது.
  • கும்பாபிஷேக விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள 5 கோவிலில் மகா கும்பாபிஷேகம் காலை நடைபெற்றது.

அதனை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி காலை 9 மணி அளவில் கணபதி பூஜையுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது.பின்னர் காலை 8.30 மணி அளவில் 2-ம் கால யாக பூஜைகள் மற்றும் மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது.

விழாவின் முக்கிய நாளான இன்று (வெள்ளிக் கிழமை) காலை 4 மணி அளவில் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு காலை 6 மணி அளவில் பூரணி பொற்கலை சமேத அய்யனார் கோவில், அதைத்தொடர்ந்து புத்து மாரியம்மன் கோவில், சிவசடையப்பர் கோவில், சாந்த காளியம்மன், புட்லாய் அம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர். அதனைத்தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண் பிக்கப்பட்டது. இரவு அனைத்து சாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தானாம்பாளையம் கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர்மக்கள் செய்தனர்.

Tags:    

Similar News