புதுச்சேரி
கபடி சங்க பொதுக்குழு கூட்டம் நடந்த காட்சி.
- திருபுவனையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
- பொதுச்செயலாளர் தமிழரசன் கபடி சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில கபடி சங்க பொதுக்குழு கூட்டம் திருபுவனையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. புதுவை மாநில கபடி சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். துணைத் தலைவர் அருள்தாஸ் வரவேற்று பேசினார்.
பொதுச்செயலாளர் தமிழரசன் கபடி சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் புதுவை மாநில கபடி சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் 2 சிறப்பு கபடி போட்டிகள் நடத்துவது, 48-வது கபடி சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து புதுவை மாநில கபடி சங்கத்தின் சார்பில் நிர்வாக பொதுச் செயலாளராக திருபுவனை கலை அன்னை விளையாட்டுக்கழக அணியின் தலைவர் மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டார்.