புதுச்சேரி

புதுவை சட்ட கல்லூரி பொன் விழா கொண்டாட்ட நிறைவு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பேசிய போது எடுத்த படம்.

தீர்ப்புகளை சட்ட கல்லூரிகளில் பாடங்களாக வைக்க வேண்டும்- சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

Published On 2022-09-10 14:40 IST   |   Update On 2022-09-10 14:40:00 IST
  • கவர்னர் தமிழிசை பேசும்போது பெண்கள் அதிகளவு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும் என குறிப்பிட்டார்.
  • தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா நடந்தது.

இதில் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் பேசியதாவது:- கவர்னர் தமிழிசை பேசும்போது பெண்கள் அதிகளவு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும் என குறிப்பிட்டார். தமிழகம், ராஜஸ்தான், ஒரிசா, ஜார்கண்ட் உட்பட 5 மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அதிகளவு பெண்கள் உள்ளனர்.

தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் அதிகளவு சட்டம் படிக்க முன் வருகின்றனர். இதனால் வரும்காலத்தில் அதிகளவு பெண் வக்கீல்களும், நீதிபதிகளும் இடம்பெறுவார்கள்.

கடந்தகாலங்களில் சுப்ரீம்கோர்ட்டில் ஒன்று அல்லது 2 பெண் நீதிபதி இடம்பெறுவதே அரிதாக இருந்தது. ஆனால் இப்போது 4 பெண் நீதிபதிகள் சுப்ரீம்கோர்ட்டில் உள்ளனர். வரும்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து பெண்கள் அதிகளவில் இடம்பெறுவார்கள்.

தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தீர்ப்புகளை பாடமாக வைத்துள்ளனர். அதேபோல சட்ட கல்லூரிகளிலும் தீர்ப்புகள் பாடமாக இடம்பெற வேண்டும். அப்போதுதான் நீதித்துறை பணிகளில் மாணவர்கள் இடம்பெற வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News