புதுச்சேரி

மணக்குள விநாயகர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.

வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-10-14 04:58 GMT   |   Update On 2022-10-14 04:58 GMT
  • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி), சென்னை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
  • இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி), சென்னை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் முகமத் நசீம் மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த முகாமை கல்லூரி முதல்வர் எஸ்.மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கல்லூரி, மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி, புதுவை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் நகரை சுற்றியுள்ள பல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து துறை இறுதி ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமார் மற்றும் வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News