புதுச்சேரி

தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காட்சி.

வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-07-18 09:02 GMT   |   Update On 2022-07-18 09:02 GMT
  • சாரதா கங்காதரன் கல்லூரியின் வேலைவாய்ப்பு குழு சார்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
  • புதுவை சமுதாய கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, சாரதா கங்காதரன் கல்லூரியை சேர்ந்த 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுவை வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் வேலைவாய்ப்பு குழு சார்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

கல்லூரியின் துணைத்தலைவர் டாக்டர் பழனிராஜா தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். அஸ்கான் டெக்னாலஜி சி.இ.ஒ. கண்ணன் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் உதயசூரியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் புதுவையை சேர்ந்த (சாப்ட்வேர், மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ், பி.பி.ஓ.) 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

முகாமில் 2020-21-ல் தேர்வு பெற்ற மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

முகாமில் கலை அறிவியல், பொறியியல், வணிகவியல், வணிக மேலாண்மை பயின்ற மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவை சமுதாய கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, சாரதா கங்காதரன் கல்லூரியை சேர்ந்த 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

மேலும் சாரதா கங்காதரன் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வே று கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ-மாணவிகள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.

விழாவில் அஸ்கான் டெ க்னாலஜி, சென்க்ஸ் அகாடமி, வெள்ளி வெஞ்சர்ஸ், அகஸ்தியா அகாடமி ஆகிய 4 நிறுவனங்களுடன் சாரதா கங்காதரன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆன், துணை ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News