ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் சர்வதேச இணைய வழி மருத்துவ மாநாடு நடைபெற்ற காட்சி.
சர்வதேச இணையவழி மருத்துவ மாநாடு
- மருத்துவ அறிவியலின் பங்கு என்ற தலைப்பில் 3-வது சர்வதே மாநாடு இணையவழியில் நடைபெற்றது.
- பல்கலைக்கழகத்தின் சுகாதார விரிவான காயம் பராமரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சந்தன் கேசென் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் கல்வி, நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் அடிப்படை மருத்துவ அறிவியலின் பங்கு என்ற தலைப்பில் 3-வது சர்வதே மாநாடு இணையவழியில் நடைபெற்றது.
இம்மாநாட்டை, ஜே. ஸ்டான்லி பேட்டர்ஸ்பை தலைவரும், இந்தியானா பல்கலைக்கழகத்தின் சுகாதார விரிவான காயம் பராமரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சந்தன் கேசென் தொடங்கி வைத்தார். சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன் முன்னிலை வகித்தார். விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் நினைவுப் பரிசு வழங்கினார்.
ஆன்லைன் வழியாக 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், புதிய நோயறிதல், சிகிச்சை விருப்பங்களின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களில் அதன் பங்கு ஆகியவற்றின் மூலம் படுக்கையாக உள்ளவர்களுக்கு பயன்படுத்துவது பற்றி விவரிக்கப்பட்டது.
மேலும், இம்மாநாட்டில், இளம் ஆராய்ச்சி அறிஞர் விருது மற்றும் ஆசிரிய, முதுகலை முனைவர் பட்டத்திற்கான பலர் ஆய்வறிக்கையை வீடியோ கான்பரசிங் மூலமாக சமர்பித்தனர்.
இதில் சிறப்பான ஆய்வறிக்கை சமர்பித்த வருக்கு, இளம் ஆராய்ச்சி அறிஞர் விருது வழங்கப்பட்டது. இத்தகவலை, ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி டீன் டாக்டர் கோட்டூர், மாநாட்டின் செயலர் டாக்டர் லட்சுமி ஜாட்டியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.