புதுச்சேரி

கிரிக்கெட் போட்டியை பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்த காட்சி.

ஊழியர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி

Published On 2023-02-27 10:52 IST   |   Update On 2023-02-27 10:52:00 IST
  • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஊழியர்களுக்கிடையேயான கிரிக்கெட் லீக் போட்டி தொடங்கியது.
  • 12ஒவர் கிரிக்கெட் போட்டியில் ஷீல்ட் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதுகிறது.

புதுச்சேரி:

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஊழியர்களுக்கிடையேயான கிரிக்கெட் லீக் போட்டி தொடங்கியது.

பிம்ஸ் மருத்துவமனை மனித வளத்துறை முதுநிலை மேலாளர் மதுசூதனன், மேலாளர் அமிர்தா முன்னிலை வகித்தனர்.கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையை உடற் கல்வி துறை இணை பேராசிரியர் டாக்டர் பிரசன்னா, மார்க்கெட்டிங் மானேஜர் கோகுல் வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் கலந்து கொண்டுபோட்டியை தொடங்கி வைத்தார்.

நடைபெறும் 12ஒவர் கிரிக்கெட் போட்டியில் ஷீல்ட் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதுகிறது.

தொடர்ந்து கிங்க்ஸ், வாரியர்ஸ், டைட்டன்ஸ் ,ஜாகுவார், உள்ளிட்ட 6அணிகள் மோதுகிறது.இன்று தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை அரை இறுதி சுற்று நடைபெறுகிறது. இறுதி சுற்று வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

வெற்றி பெறும் அணிக்கு ரொக்க பரிசு மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையுடன் சான்றிதழை கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் வழங்குகிறார்.

Tags:    

Similar News