புதுச்சேரி

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமலோர்பவம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்துசாமி பரிசுவழங்கிய காட்சி.

பள்ளிகளுக்கிடையேயான கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி

Published On 2022-12-15 15:05 IST   |   Update On 2022-12-15 15:05:00 IST
  • அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி உள்ளரங்கில் நடந்தது.
  • அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

புதுச்சேரி:

அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி உள்ளரங்கில் நடந்தது.

இப் போட்டியில் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி குளுனி சி.பி.எஸ்.இ. பள்ளி, தி நியூ ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மற்றும் தி ஸ்டடி எக்கோல் சர்வதேச பள்ளி ஆகிய 7 பள்ளிகளும் போட்டியில் பங்கேற்றன.

அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டிக்கு பாதரியார் லூர்து வில்சன், ஆன் டனி தாஸ் ஸ்டாலின் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.

இப்போட்டியில் பண்ருட்டி தி நியூ ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், குளூனி சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசு, பண்ரூட்டி ஜான் டூவிமெட்ரிக் மேல்நிலைபள்ளி 3-ம் பரிசும் பெற்றது.

தூய இருதய ஆண்டவர் பசிலிகா பாதிரியார்கள், குழந்தைசாமி, டெலமோர், உப்பளம் புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலய பாதிரியார் அருள் புஷ்பம் மற்றும் பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான லூர்து சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.

இந்நிகழச்சியினை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள் மதுமிதா, பிரசன்னா மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி ஜெயபாரதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அமலோற்பவம் லூர்து அகாடமி மாணவி மோகனபிரியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News