புதுச்சேரி

யானை மரணம் குறித்து விசாரணை -நாராயணசாமி வலியுறுத்தல்

Published On 2022-11-30 08:06 GMT   |   Update On 2022-11-30 08:06 GMT
  • புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  • ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

யானை லட்சுமி முறையாக பராமரிக்கப்பட்டது. இருப்பினும் பீட்டா அமைப்பினர் யானையை காட்டில் விட வேண்டும் என்று கூறிய போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து யானையை முறையாக பராமரிப்பதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தெரிவித்தோம். யானையை கோவிலில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

தற்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்துள்ளது. யானை லட்சுமி நம்மை விட்டு பிரிந்துள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வதிக்கின்ற இந்த யானை இப்போது நம்மிடம் இல்லாது மிக பெரிய அதிர்ச்சியும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த அளவிற்கு மக்கள் யானையை நேசித்துள்ளனர். இது புதுவைக்கு மிகப்பெரிய இழப்பு. யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணயில் யார் தவறு செய்தார்கள் என தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News