புதுச்சேரி

கணினி அறிவியல் துறை சார்பில் தகவல் மீட்டெடுப்பு என்ற தலைப்பில் ஒருநாள் சர்தேச கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.

தகவல் மீட்டெடுப்பு கருத்தரங்கு

Published On 2022-12-18 13:11 IST   |   Update On 2022-12-18 13:11:00 IST
  • புதுவை வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில் தகவல் மீட்டெடுப்பு என்ற தலைப்பில் ஒருநாள் சர்தேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கல்லூரியின் துணைத்தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார்.
  • 2-வது அமர்வில் பேராசிரியர் சேவுகன்மென் திறன்களை பயனுள்ள விளக்க காட்சியாக உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.

புதுச்சேரி:

புதுவை வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில் தகவல் மீட்டெடுப்பு என்ற தலைப்பில் ஒருநாள் சர்தேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கல்லூரியின் துணைத்தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார்.

இந்த கருத்தரங்கில் ஜெர்மனியில் உள்ள கெசிஸ் லெய்ப்னிஸ் சமூக அறிவியல் பள்ளியின் குழு தலைவர் பிலிப் மேயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தகவல் மீட்டெ டுப்பை இயற்கை செயலாக்கத்துடன் இணைத்தல் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து 2 தொழில் நுட்ப அமர்வுகள் நடந்தன. முதல் அமர்வில் புதுவை பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் தலைவர் ஜெயசங்கர் மேற்படிப்புகளுக்கு தேவையான மின் வளங்கள் என்ற தலைப்பிலும், ஆராய்ச்சி மாணவர்கள் எப்படி? எங்கே? தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவது என்பதைப்பற்றியும் விளக்கினார்.

2-வது அமர்வில் பேராசிரியர் சேவுகன்மென் திறன்களை பயனுள்ள விளக்க காட்சியாக உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த சர்வதேச கருத்தரங்கில் புதுவையை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முதுகலை கணினி துறை தலைவி கவிதா கருத்தரங்கு பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் உதயசூரியன் வரவேற்றார். உதவி பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News