பாகூர்-கன்னியகோவில் ரோட்டில் பழமையான மரம் பட்டுபோகியுள்ளதை படத்தில் காணலாம்.
பழமையான மரங்களை பட்டுபோக செய்யும் தொழில் நிறுவனங்கள்
- பாகூர் பகுதியில் தொழில் நிறுவனங்கள் பழமையான மரங்களை பட்டுபோக செய்வதாக தன்னார்வு அமைப்பு புகார் செய்தனர்.
- அதற்காக மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வனத்துறை, பொதுப் பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை புதுவையை பசுமையாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.மேலும் பல இடங்களில் சமூக மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் மரங்களை நடப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அதையும் மீறி சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மரத்தை வெட்டுவது அல்லது நன்கு பசுமையாக இருந்த மரத்தை வேர்களில் மருந்து தெளித்து பட்டு போக செய்கின்றனர்.
இதுபோல் கிருமாம்பாக்கம் அருகே கந்தன்பேட் கடலூர்-புதுவை மெயின் ரோடு, பாகூர்-கன்னியர் கோயில் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள பல ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங்களை பட்டுபோக செய்திருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இது சம்பந்தமாக வனத்துறையோ அல்லது பராமரித்து வரும் துறைகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் பாகூர் பகுதியை சேர்ந்த தன்னார்வு அமைப்பு வனத்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தொடர்ந்து கண்காணிக்க வலியுறுத்தி உள்ளனர்.