கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்த்த முதல்-அமைச்சர் ரங்கசாமி.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசித்து பார்த்த ரங்கசாமி
- முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.
- போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரு வீதியில் உள்ள வாட்ச் கடையில் அமந்து நண்பர்க ளுடன் பேசுவது வழக்கம்.
காலை நேர உணவை பல நாட்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவார். கிரிக்கெட் ரசிகரான முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.
புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறையில் உள்ள டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பார். நேரம் இல்லாத பட்சத்தில் கிரிக்கெட் போட்டி முடிவுகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடந்தது. நேற்று மாலை நேரு வீதி வாட்ச் கடைக்கு வந்தார்.
அங்கு அமர்ந்து போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரசித்து பார்த்தார். போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.