புதுச்சேரி

அமைச்சர் சந்திர பிரியங்கா கணினி மையத்தை  திறந்து வைத்த காட்சி.

அரசு பெண்கள் ஐ.டிஐ.,யில் கணிணி மையம் திறப்பு

Published On 2022-07-26 10:08 IST   |   Update On 2022-07-26 10:08:00 IST
  • புதுவை வம்பாகீரப்பாளையத்தில் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.
  • இங்கு நவீன வசதிகள் கொண்ட கணிணி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. 

இங்கு நவீன வசதிகள் கொண்ட கணிணி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 60 கணிணிகள், கண்காணிப்பு கருவிகள், வைரஸ் தடுப்பு மென்பொருள், அதிவேக இணையதள இணைப்பு, ஒருங்கிணைந்த சர்வர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மையத்தை தொழிற்ப யிற்சி மாணவிகள் பயன்படுத்துவதுடன், பிற நிறுவனங்கள் ஆன்லைன் தேர்வு, பயிற்சிகளுக்கு வாடகை அடிப்படையிலும் வழங்கப்பட உள்ளது. இந்த மையத்தை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை வகித்து திறந்து வைத்தார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வரவேற்றார். கென்னடி எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். தொழிலாளர் துறை செயலர் சுந்தரேசன், துணை செயலர் முத்துமீனா, முதல்வர்கள் அழகானந்தம், சோமசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர். சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News