புதுச்சேரி

மீன் மார்க்கெட்டில்-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு நடத்திய காட்சி.

மீன் மார்க்கெட்டில்-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-10-12 09:56 IST   |   Update On 2022-10-12 09:56:00 IST
  • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்ன மணிகூண்டு மார்க்கெட் மீன் வியாபாரிகள் புதுவை மாநில உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறைகள் சம்பந்தமாக நேரில் வரக் கோரி அழைத்தனர்.
  • மின்துறை இளநிலை பொறியாளர் சுரேசை செல்போனில் அழைத்து மரங்களை உடனே அகற்றுங்கள் என கூறினார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்ன மணிகூண்டு மார்க்கெட் மீன் வியாபாரிகள் புதுவை மாநில உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறைகள் சம்பந்தமாக நேரில் வரக் கோரி அழைத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ. வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார், முதலில் மீன் மார்க்கெட் பாண்லே நிலையம் அருகில் வெட்டப்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தாமல் பல வாரங்களாக இருப்பதனை எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் தெரிவித்தனர். உடனே மின்துறை இளநிலை பொறியாளர் சுரேசை செல்போனில் அழைத்து மரங்களை உடனே அகற்றுங்கள் என கூறினார்.

மேலும் மின்சார டிரான்ஸ்பார்மர் கண்ரோல் பொட்டியை சற்று தள்ளி வைக்கும்படியும் மின் மார்க்கெட் கூரைகளை சரிசெய்து தரைகளை ஒழுங்குப்படுத்தி கொடுக்கும்படியும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, காலப்பன் மற்றும் தி.மு.க. நிருவாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News