புதுச்சேரி

பயணாளிகளுக்கு உதவி தொகை பெறுவதற்கான ஆணையை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வழங்கிய போது எடுத்த காட்சி.

குறைகள் இருந்தால் நேரடியாக சுட்டிக் காட்டுங்கள்-அமைச்சர்

Published On 2022-10-13 12:22 IST   |   Update On 2022-10-13 12:22:00 IST
  • ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விதவை பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது‌.
  • மேலும் என் மேல் என்ன குறைகள் இருந்தாலும் தைரியமாக சுட்டிக் காட்டலாம் இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி:

ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விதவை பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது‌.

இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ. சரவணன்குமார் கலந்து கொண்டு சுமார் 80 விதவை பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான அட்டையை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பேசியதாவது:-

பொது மக்களாகிய நீங்கள் உங்கள் தேவை களை என்னிடம் கட்சி அலுவலகத்திலும், சட்டசபையிலும் அல்லது எனது வீட்டிலும் நேரடியாக வந்து தெரிவிக்கலாம். உங்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் இருக்கிறேன்.

மேலும் என் மேல் என்ன குறைகள் இருந்தாலும் தைரியமாக சுட்டிக் காட்டலாம் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில செயலாளர் ஜெயக்குமார், தொகுதி தலைவர் தியாகராஜன், பா.ஜனதா பிரமுகர் அய்யனார், துணைத் தலைவர் முரளி, கிளை தலைவர் முரளி, ஊசுடு தொகுதி மகளிர் மேம்பாட்டு துறை பொறுப்பாளர்கள் ஜெய்சங்கர், தேவா, பிரசாந்த், கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News