கோப்பு படம்
கணவன்-மனைவி, மகளை தாக்கி கொலை மிரட்டல்
- காலிமனையில் மோட்டார் சைக்கிள் நிறுத்திய தகராறில் கணவன்-மனைவி, மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- ரெட்டியார் பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் சீனுவாசன். இவர் ரெயில்வே துறையில் பணி செய்து வருகிறார்
புதுச்சேரி:
காலிமனையில் மோட்டார் சைக்கிள் நிறுத்திய தகராறில் கணவன்-மனைவி, மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவை ரெட்டியார் பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் சீனுவாசன். இவர் ரெயில்வே துறையில் பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியில் அவருக்கு சொந்த காலிமனையில் சுரேஷ் என்பவர் வீட்டில் குடியிருந்தவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு சீனுவாசன் கேட்டுக்கொண்டிருந்த போது அதே தெருவை சேர்ந்த கோபால கிருஷ்ணன், பத்மநாபன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி சீனுவாசனை வீடுபுகுந்து கையாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் சீனுவாசனின் மனைவி கஸ்தூரி பாய் மற்றும் அவரது மகள் ஆகியோரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர்களை தாக்கியதோடு அவர்களிடமிருந்த செல்போனை வலுக்கட்டா யமாக பறித்து சென்று விட்டார்.
மேலும் இனிமேல் இந்த வீட்டில் இருந்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்து சீனுவாசன் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதையடுத்து சீனுவாசன் புதுவை வடக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அவர்களும் இதன் மீது நடவடிக்கை எடுக்காததால் சீனுவாசன் புதுவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ரெட்டியார் பாளையம் போலீசுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார் சீனுவாசனையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கோபால கிருஷ்ணன், பத்மநாபன் மற்றும் அசோக் குமார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.