புதுச்சேரி

வீடு கட்ட பணி ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

வீடு கட்ட பணி ஆணை-கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-11-30 11:15 IST   |   Update On 2022-11-30 11:15:00 IST
  • உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான மானியம் ஊக்கத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
  • 320 சதுர அடிக்கு தரைபரப்பளவு குறையாமல் ஆர்.சி.சி. தளம் போட்டு கழிவறையுடன் வீடு கட்ட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான மானியம் ஊக்கத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.

வீடு கட்டுவதற்கான மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செலுத்தப்படும் என்றும், மானிய தவணைத் தொகை பெற்ற தேதியில் இருந்து 4 மாத காலத்திற்குள் அதற்கான கட்டிட வேலையை முடித்து விட வேண்டும் என்று, 320 சதுர அடிக்கு தரைபரப்பளவு குறையாமல் ஆர்.சி.சி. தளம் போட்டு கழிவறையுடன் வீடு கட்ட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி அறிவுறுத்தினார்.

இதில் இளநிலை பொறியாளர், ஆய்வாளர் முரளி, தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல் , கிளை செயலாளர் செல்வம், காலப்பன்,ரவி, ஜெயசீலன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் ஹரிகிருஷ்ணன், குணசீலன்பாலாஜி, லாரன்ஸ்,மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News