ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா. சைதன்யா தொடங்கி வைத்த காட்சி.
- புதுவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகள் பெருகி வருகிறது.
- கடந்த சில தினங்களாக சாலையில் ஏற்படும் விபத்துகளால் உயிர் பலிகளும் அதிகமாகி வருகிறது.
புதுச்சேரி
புதுவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகள் பெருகி வருகிறது. கடந்த சில தினங்களாக சாலையில் ஏற்படும் விபத்துகளால் உயிர் பலிகளும் அதிகமாகி வருகிறது. பொதுமக்களுக்கு தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணி போக்குவரத்து காவல்துறை அலுவலகம் எதிரே தொடங்கியது. 'போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா. சைதன்யா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் போக்குவரத்து காவல்துறை போலீசார் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி செஞ்சி சாலை வழியாக எஸ். வி. பட்டேல் சாலை, ஆம்பூர் சாலை வழியாக மீண்டும் போக்குவரத்து காவல்துறை அலுவலகம் வந்து அடைந்தது.
'இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு. மாறன் கூறியதாவது:-
கடந்த 4 நாட்களில் சாலை விபத்துகளில் எந்தவித காரணமும் இன்றி சாலையில் விழுந்து 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இதுபோன்ற உயிர்பலிகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பேரணி நடத்தியதாகவும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவதையும், காரில் செல்பவர் சீட் பெல்ட் அணிவதையும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.