புதுச்சேரி

புதுவை கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் காட்சி.

புதுவையில் சாரல் மழை; கடலில் அலைகள் சீற்றம்

Published On 2022-12-08 07:54 GMT   |   Update On 2022-12-08 07:54 GMT
  • வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது.
  • கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது.

மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்யக்கூடிய இடங்க ளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி புதுவையி லும் புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களும் வெளியிட ப்பட்டுள்ளது.

காற்றினால் கட்-அவுட், பேனர்கள் சரிந்து விழுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகர், புறநகரில் பேனர், கட்அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. தா ழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கினால் அப்பகுதி மக்களை தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளது. அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானிலை முழுமையாக மாறி, குளிர்ந்த காற்றுடன் இருண்டு காணப்படுகிறது. முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவைக்கு வரவழை க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் புயல், மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Tags:    

Similar News