புதுச்சேரி

அமைச்சக ஊழியருடன் எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ் குமார் ஆகியோர் தலைமை செயலகத்தை முற்றுகை இட்ட காட்சி.

தலைமைச் செயலகம் மீண்டும் முற்றுகை

Published On 2022-10-30 13:34 IST   |   Update On 2022-10-30 13:34:00 IST
  • புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • அதைத்தொடர்ந்து தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முதல் கட்டமாக 116 யூ.டி.சி. ஊழியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்டமாக எல்.டி.சி, உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் உதவியாளர் பணியிடத்தை நேரடியாக தேர்வு செய்தால் தங்கள் பதவி உயர்வு பாதிக்கப்படும் என அமைச்சக ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வந்தனர்.

அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் தலைமைச்செயலகத்தில் கடந்த திரண்டு, அங்கு நிர்வாகத்துறை செயலர் கேசவன் அறை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தலைமைச்செயலர் ராஜீவ் வர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில்  தலைமை செயலகம் முன்பு மீண்டும் அமைச்சக ஊழியர்கள் திரண்டு முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோரும் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டனர். உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க திங்கள்கிழமை ஆணை வெளியாவதை நிறுத்தவேண்டும். நேடியாக உதவியாளர்களை தேர்வு செய்தால் 600 அமைச்சக ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என வலியுறுத்தினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தலைமைசெயலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் வரவில்லை. இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

Tags:    

Similar News