புதுச்சேரி

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காட்சி.

வேளாண் அறிவியல் கல்லூரியில்முப்பெரும் விழா

Published On 2022-12-24 09:28 GMT   |   Update On 2022-12-24 09:28 GMT
  • புதுவை தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக விவசாயிகள் தினம், 6-ம் ஆண்டு கல்லூரி தொடக்க விழா மற்றும் மாணவர்கள் பயிற்சி பண்ணை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
  • விழாவில் முதல்-அமைச்சர் பேசும் போது வரும் காலங்களில் மாணவர்கள் விவசாயத் துறையில் சாதனை படைத்து, ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

புதுச்சேரி:

புதுவை தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக விவசாயிகள் தினம், 6-ம் ஆண்டு கல்லூரி தொடக்க விழா மற்றும் மாணவர்கள் பயிற்சி பண்ணை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் அக்ரி கணேஷ் நோக்கு உரைஆற்றினார்.

விழாவில் முதல்-அமைச்சர் பேசும் போது வரும் காலங்களில் மாணவர்கள் விவசாயத் துறையில் சாதனை படைத்து, ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் பஜன் கோ வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார் .

மேலும் கல்லூரியின் முந்தைய ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசளித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் மணிகண்டன், ஜெயசவிதா மோனிகா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் கல்லூரியின் உதவி பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News