புதுச்சேரி

பட்டமளிப்பு விழாவில் டி.சி.எஸ். நிறுவனத்தின் நிர்வாகி கிரிஷ் நந்திமத் ஒரு மாணவிக்கு பட்டம் வழங்கிய போது எடுத்த படம். 

மணக்குள விநாயகர் கல்லூரியில் பட்ட மளிப்பு விழா

Published On 2022-07-19 09:55 IST   |   Update On 2022-07-19 09:55:00 IST
  • மணக்குள விநாயகர் இன்ஸ்டி டியூட்ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
  • கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்

புதுச்சேரி:

கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டி டியூட்ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்.விழாவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன தலைமை கையகப்படுத்துதல் துறை உலகளாவிய தலைவர் கிரிஷ் நந்திமத் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் புதுவை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த 31 மாணவ-மாணவிகளுக்கு 33 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் இளநிலை, முதுநிலை பட்டம் முடித்த 1,220 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, வேலை வாய்ப்பு துறை தலைவர் கைலாசம், மணக்குள விநாயகர் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் காஞ்சனா, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ் மற்றும் பலர்க லந்து கொண்டனர். முடிவில் எந்திரவியல் துறை தலைவர் ராஜாராம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News