புதுச்சேரி

கூட்டத்தில் ரோக அருள்தாஸ் பேசிய போது எடுத்த படம்.

இட ஒதுக்கீடு பெற அரசு நடவடிக்கை

Published On 2022-11-22 05:03 GMT   |   Update On 2022-11-22 05:03 GMT
  • ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில அளவிலான மாணவர் அணி கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
  • கூட்டத்துக்கு மாணவ அணி தலைவர் மகேந்திரவேலன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில அளவிலான மாணவர் அணி கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாணவ அணி தலைவர் மகேந்திரவேலன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கூட்டமைப்பு மாநில தலைவர் ரோக.அருள்தாஸ், பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவ தலைவர் திருமால், பேரவை தலைவர் முருகையன், அமைப்பு செயலர் பொன்னிவேல், நகர செயலாளர் முனியன், மாநில செயலாளர் கண்ணன், அமைப்பாளர் நாகமுத்து, துணை பொதுச் செயலாளர் பாலச்சந்திரன், தொண்டரணி தலைவர் மாயகிருஷ்ணன், இளவேந்தன், முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதுவை தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றது. ஆனால் புதுவையில் இடம், மின்சாரம், நீர் போன்றவற்றை அனுபவித்து கொண்டு வரும் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும் பல ஆண்டுகளாக பெறாமல் இருப்பதை என்.ஆர். அரசு பெற்று தரவேண்டும். வழங்காத பட்சத்தில் அரசே நீதிமன்றங்களுக்கு செல்லவேண்டும்.

ஜிப்மரில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் புதுவை மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளார் வேல்முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News