புதுச்சேரி

கோப்பு படம்

கவர்னர் மாளிகை தரகு அலுவலகமாக மாறியுள்ளது- முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் சொல்கிறார்

Published On 2022-08-01 14:53 IST   |   Update On 2022-08-01 14:53:00 IST
  • மோடி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது,
  • ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது, வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது, குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற் பட்டுள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்களை ஒடுக்க வேண்டும் என அமலாக்க துறை, வருமான வரித்துறை மூலம் பொய் வழக்கு போட்டு மத்திய அரசு மிரட்டி வருகிறது. புதுவையில் உள்ள கவர்னர் மாளிகை தரகு அலுவலகமாக மாறியுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. நேரம் வரும் போது அதை வெளியிட தயாராக உள்ளோம்.

கவர்னர் தமிழிசை தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். அவர் கவர்னர் வேலை பார்ப்பதை விட்டுவிட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் காங்.கிரஸ் கட்சி அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும்.

கவர்னர் தமிழிசை பா.ஜனதா தலைவராகவும், முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். கவர்னர் மாளிகை பா.ஜனதா அலுவலகமாக மாறி வருகிறது. கவர்னர் தமிழிசை பள்ளிகளுக்கு ஆய்வு செய்ய செல்லும் போது சமஸ்கிருத மொழியை மாணவர்களிடம் திணிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News