புதுச்சேரி

கோப்பு படம்

அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை தொடர்ந்து நடத்த வேண்டும் - வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Published On 2022-07-11 14:34 IST   |   Update On 2022-07-11 14:34:00 IST
  • புதுவை அரசு பிப்மேட் மூலம் 5 தொழில்நுட்ப கல்லூரிகளை இயக்கி வருகிறது.
  • புதுவை லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா பரவலால் மாணவிகள் சேர்க்கை குறைந்தது.

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு பிப்மேட் மூலம் 5 தொழில்நுட்ப கல்லூரிகளை இயக்கி வருகிறது. இதில் புதுவை லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா பரவலால் மாணவிகள் சேர்க்கை குறைந்தது. இதை காரணம் காட்டி கல்லூரியை மூடி பொறியியல் கல்லூரியாக மாற்ற அரசு முயற்சிக்கிறது.

இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. இது தவறான முடிவாகும். கொரோனா பரவல், மாணவர் பஸ் நிறுத்தம் போன்ற காரணத்தால் மாணவிகள் சேர்க்கை குறைந்துள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள மாகி, ஏனாம், காரைக்காலில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

23 தொகுதிகளை உள்ளடக்கிய புதுவையில் மாணவி களின் தொழில்கல்விக்கு ஒரே கல்லூரிதான் உள்ளது. இதையும் மூட நினைப்பது மிகவும் வேதனைக்குரியது. எனவே மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை தொடர்ந்து தடையின்றி அரசு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News