புதுச்சேரி

கோலப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கோஜிரியோ கராத்தே சங்க மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் பரிசு வழங்கிய காட்சி.

கோலப்போட்டி பரிசளிப்பு விழா

Published On 2023-01-18 14:54 IST   |   Update On 2023-01-18 14:54:00 IST
  • புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, மெஹந்தி போட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
  • இதன் பரிசளிப்பு விழா கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, மெஹந்தி போட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் அப்பகுதி மகளிர் மட்டும் குழந்தைகள் ஏராளமானோர் பங்கு பெற்றனர். இதன் பரிசளிப்பு விழா கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜிரியோ கராத்தே சங்க மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், மனிதநேய மக்கள் சேவை இயக்கம் இளைஞரணி தலைவர் விநாயகம், ரெனோ, ஓம்சக்தி ரமேஷ், சந்திரசேகர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள்.

விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஐஸ்வர்யா மற்றும் புஷ்பா செய்திருந்தனர்.

Tags:    

Similar News