புதுச்சேரி

இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) புதுவை மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாகூர் ஞானமூர்த்திக்கு நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.

இந்திய குடியரசு கட்சி தலைவராக ஞானமூர்த்தி தேர்வு

Published On 2022-09-03 14:26 IST   |   Update On 2022-09-03 14:26:00 IST
  • இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
  • புதுவை மாநில தலைவராக மீண்டும் பாகூர் ஞானமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.

புதுச்சேரி:

இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

புதுவை மாநில தலைவராக மீண்டும் பாகூர் ஞானமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து புதுவை மாநில துணை தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளராக கோபிநாத், இணை பொதுச் செயலாளராக உத்திர–லிங்கம், பொருளாளராக ராஜ்குமார், செயல்தலை–வராக வக்கீல் ஆனந்தன், தலைமைநிலைய செயலாளராக ராஜகுரு, மாநில செயற்குழு உறுப்பினராக ராஜா ஆகியோர் பொறுப்பேற்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அணைத்து மாநில நிர்வாகிகளும், வருகிற

21-ந் தேதி தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலேவை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

Tags:    

Similar News