கென்னடி எம்.எல்.ஏ. கோவிலுக்கு ஒருகால பூஜைக்கு நிதி வழங்கிய காட்சி.
கோவிலுக்கு ஒருகால பூஜைக்கு நிதி-கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- கோவில்களுக்கும் ஒரு கால பூஜைக்காக தலா 20 ஆயிரம் நிதியை இந்து சமய அறநிலையத்துறைசார்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
- தி.மு.க. நிர்வாகிகள் தங்கமணி, மனோஜ், பாலாஜி, ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் உள்ள நேதாஜி நகர் -2 பகுதியில் அமைந்துள்ள தேசமுத்து மாரியம்மன் கோவில், மற்றும் நேதாஜி நகர் -3 பகுதியில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் ஒரு கால பூஜைக்காக தலா 20 ஆயிரம் நிதியை இந்து சமய அறநிலையத்துறைசார்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள் மற்றும் உப்பளம் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி,மாநில மீனவர் அணி விநாயகமூர்த்தி, மாநில பிரதிநிதி காத்தலிங்கம், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், கவுதமன், தி.மு.க. நிர்வாகிகள் தங்கமணி, மனோஜ், பாலாஜி, ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.