புதுச்சேரி

திருபுவனை அரசு பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்த போது எடுத்தபடம்.

இலவச பொது மருத்துவ முகாம்

Published On 2022-11-21 12:14 IST   |   Update On 2022-11-21 12:14:00 IST
  • வில்லியனூர் அருகே உள்ள லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், புதுவை ரியல் என் ஜி. ஓ. நிறுவனமும் இணைந்து, திருபுவனை அரசு பள்ளி வளாகத்தில் இலவச பொதுநல மருத்துவ முகாமினை நடத்தினர்.
  • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதா ரத்துறை ஆய்வாளர் உதய குமார், சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் கலியுகராணி ஆகியோர் செய்து இருந்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே உள்ள லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், புதுவை ரியல் என் ஜி. ஓ. நிறுவனமும் இணைந்து, திருபுவனை அரசு பள்ளி வளாகத்தில் இலவச பொதுநல மருத்துவ முகாமினை நடத்தினர். இந்த முகாமிற்கு ரியல் என் .ஜி. ஓ. இயக்குனர் லாரன்ஸ் தலைமை தாங்கி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். மேலாளர் குமார், திட்ட அதிகாரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மழைக்கால பேரிட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களுக்கு உடல் ரீதியான மருத்துவ ஆலோசனைகள் அளித்து மருந்துகள்-மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் ரத்த அழுத்தம், சக்கரை நோய், இருதயம், கண்கள் மற்றும் பல்வேறு உடல் நோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்து வர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்த மருத்துவ முகாமில் பொதுநல மருத்துவர் டாக்டர் சசிதரன், குழந்தைகள் நல மருத்துவர் தொனி, பூஜா, கண் மருத்துவர் ஷோபனா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதா ரத்துறை ஆய்வாளர் உதய குமார், சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் கலியுகராணி ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News