புதுச்சேரி

இலவச மூக்கு கண்ணாடிகளை இந்து முன்னனி தமிழக தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வழங்கினார். அருகில் வெற்றி செல்வம் உள்ளார்.

இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா

Published On 2022-07-27 14:41 IST   |   Update On 2022-07-27 14:41:00 IST
  • ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி மாநில கலாச்சாரப் பிரிவு சார்பில் கலைமாமணி டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன் ஏற்பாட்டில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
  • சபாநாயகர் ஏம்பலம்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி மாநில கலாச்சாரப் பிரிவு சார்பில் கலைமாமணி டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன் ஏற்பாட்டில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

புதுவை கண் மருத்துவர் கலைமாமணி டாக்டர் தமிழ்வாணன் தலைமையில் மருத்துவர் குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து, இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கும் விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக இந்து முன்னணியின் தமிழகத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துக் கொண்டு பரிசோதிக்கபட்ட பயனாளிகள் அனைவருக்கும் மூக்குக் கண்ணாடி அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி புதுவை மாநில தலைவர் சனில்குமார், பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் டாக்டர் க.வெற்றிச்செல்வம், இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் பக்தன், சண்முகம், ராஜேஷ், கிருஷ்ணன், தியாகராஜன், செந்தில், குருகுல பயிற்சியாளர் முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தராஜ், கலாச்சார பிரிவு நிர்வாகிகள் வக்கீல் ராதாகிருஷ்ணன், பயில்வான் பெரியசாமி, இன்பசேகர், குருகுல சிலம்பம் பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட குருகுல நிர்வாகிகளும், இந்து முன்னணி நிர்வாகிகளும், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுடனர்.

Tags:    

Similar News