புதுச்சேரி

இலவச பஸ்சை செயல்படுத்த செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விடம் மனு அளித்த காட்சி.

இலவச பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்- செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விடம் மனு

Update: 2022-07-06 05:52 GMT
  • பாகூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவர்கள்
  • ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி:

பாகூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவர்கள் செந்தில் குமார் எம்.எல்.ஏ,வை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் படிக்கும் மாணவ மாணவிகள் பயணிப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து நிரந்தரமாக பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மாணவ-மாணவிகளுக்கு வழங்கப் படும் சீருடைகள் காலத்தோடு வழங்கப்படவில்லை அந்த சீருடைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முட்டை வழங்கப்படுவதில்லை அதையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ., இது குறித்து கல்வி துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை இயக்குனரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Tags:    

Similar News