புதுச்சேரி

இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.

இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

Published On 2022-10-28 09:18 IST   |   Update On 2022-10-28 09:18:00 IST
  • மாபெரும் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • சம்பூர்ணா சித்தா கிளினிக் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

வில்லியனூரில் பகுதியில் அமைந்துள்ள சம்பூர்ணா சித்த மருத்துவமனையில் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனர் சுசான்லி டாக்டர் ரவியின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டர் புதுவை மண்டலத்தின் சார்பில் வலி நிவாரணத்திற்காக மாபெரும் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனரும், தலைவருமான சுசான்லி டாக்டர் ரவி தலைமை தாங்கினார். சம்பூர்ணா சித்தா கிளினிக் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

டாக்டர் சினேகா வரவேற்று பேசினார். கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ட் சென்டரின் புதுவை மண்டல தலைவர் டாக்டர் வெங்கடேசன், டாக்டர்கள் சாரதாஸ்ரீ, லீனா, பவானி, இலக்கியா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். புகழ் ஹெல்த் கேர் நிறுவனர் மங்கையர்கரசி நன்றி கூறினார்.

முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் சம்பூர்ணா சித்தா மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News