புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கட்டுமான நலச்சங்க தலைவர் என்ஜினீயர் சரவணன் மனு அளித்த போது எடுத்தபடம்.

ரூபன் திட்டத்தில் செய்த பணிகளுக்குபணம் பட்டுவாடா செய்ய வேண்டும்-கட்டுமான நலச்சங்கம் முறையீடு

Published On 2023-02-17 11:02 IST   |   Update On 2023-02-17 11:02:00 IST
  • புதுவை கட்டுமான நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் என்ஜினீயர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
  • முதல் கட்டமாக ரூ.50 லட்சம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை கட்டுமான நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் என்ஜினீயர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் தத்தெடுத்த ரூபன் திட்டத்தின் கீழ் மாதிரி கொம்யூன்களாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பாகூர் மற்றும் திருநள்ளாறு கொம்யூனில் பொதுப்பணித்துறை, சுகாதார கோட்டம், கட்டிடம் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டத்தின் சார்பில் கடந்த ஆண்டு பாகூர் பஸ் நிலையம் மற்றும் 2 ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றது.

கட்டுமான நலச்சங்க ஒப்பந்ததாரர்கள் இந்த பணிகளை செய்து வந்தனர். இதற்காக முதல் கட்டமாக ரூ.50 லட்சம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த பணம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் இந்த பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க டி.ஆர்.டி.ஏ. காலதாமதம் செய்து வருவதால் இந்த பணிகள் அனைத்தும் கைவிடப்படும் நிலையில் உள்ளது.

இதுபற்றி ஒப்பந்த தாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து பேசியும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஒப்பந்ததா ரர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலும் ஏற்பட்டது.

எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News