புதுச்சேரி

ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி சார்பில் நடந்த சர்வதேச மாநாட்டில் சிறப்பு விருந்தினருக்கு சேர்மன் டாக்டர் கணேசன் நினைவு பரிசு வழங்கினார்.

சுகாதார தொழில் கல்விக்கான 2-வது சர்வதேச மாநாடு

Published On 2022-12-12 13:42 IST   |   Update On 2022-12-12 13:42:00 IST
  • கல்விக்கான 2-வது சர்வதேச மாநாடு (ஐகான் 2022) புதுவை தனியார் ஓட்டலில் நடந்தது.
  • கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

சேலம் விநாயக மிஷின் ரிசர்ச் பவுண்டேஷனின் ஒரு அங்கமான கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், சுகாதாரத் தொழில்களில் புதுமைகள்" கல்விக்கான 2-வது சர்வதேச மாநாடு (ஐகான் 2022) புதுவை தனியார் ஓட்டலில் நடந்தது.

சூப்பர் ஸ்கில்லிங் கட்டமைப்பின் மூலம் 21-ம் நூற்றாண்டின் கற்றலின் தேவைகளை நோக்கி சுகாதாரத் தொழில்சார் கல்வியை ஆராயும் நோக்கில் 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை விநாயகா மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் மற்றும் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி சேர்மன் டாக்டர். கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக டாக்டர் அவினாஷ் சுபே, டாக்டர். பி.சி. ராய் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் பயிற்சி பட்டறைகள், முக்கிய உரைகள், முழுமையான அமர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் சுகாதாரத் தொழில்கள், கல்வியில் கற்பித்தல், கற்றல், மதிப்பீடு ஆகியவற்றில் புதுமைகள் பற்றிய விளக்கக்காட்சிகள் மூலமாக விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதில ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி டீன். டாக்டர்.கோட்டூர், விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல், மருத்துவ கல்விப் பிரிவு டீன் டாக்டர் மகாலக்ஷ்மி, இயக்குனர் டாக்டர் விஷ்ணு பட், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயசிங், மருத்துவக் கல்விப் பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

Tags:    

Similar News