புதுச்சேரி

கோப்பு படம்.

null

மீனவர்களை எம்.பி.சி.யாக மாற்ற வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் அறிக்கை

Published On 2023-06-02 08:20 GMT   |   Update On 2023-06-02 08:20 GMT
  • கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.
  • ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 புதுவையில் எம்.பி.சி. பிரிவு 2008-ல் தொடங்கப்பட்டது. அப்போது 4 பிராந்திய மீனவர்களும் எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

அதில் 20 சதவீதம் மீனவர் சமுதாய மாணவர்கள் பயன்பெற்றனர். அரசு எம்.பி.சியில் இருந்து இ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கி காரைக்கால் மீனவர்களின் கருத்தை கேட்காமல் அவர்களை இ.பி.சி.யில் சேர்த்தது.

புதுவை, காரைக்கால் மீனவர்களையும் இ.பி.சி.யில் வைத்து அவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு செய்தது தான் காரைக்கால் மீனவருக்கு இழைத்த அநீதியின் அடித்தளம்.

இதன் விளைவாக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.

எம்.பி.சி.யில் வைத்திருந்தால் காரைக்காலுக்கான 18 சதவீதத்தில் ஒரு சில இடங்களையாவது பெற்றிருப்பர்.

கடந்த 13 ஆண்டாக நிகழ்ந்து வரும் அநீதியை காரைக்கால் அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ கண்டு கொள்ளவில்லை. ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு. அவர்களை இ.பி.சி.யில் இருந்து எம்.பி.சிக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News