புதுச்சேரி

மீன் வளர்ப்போருக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் மீன் குஞ்சுகளை வழங்கிய போது எடுத்த படம். அருகில் செல்வகணபதி எம்.பி. கென்னடி எம்.எல்.ஏ. உள்ளனர்.

மீன் வளர்ப்போர் 20 பேருக்கு கொடுவா-திலேபியா மீன் அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்

Published On 2022-07-10 13:42 IST   |   Update On 2022-07-10 13:42:00 IST
  • மீன்வளர்ப்போர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது
  • அமைச்சர் லட்சுமிநாராயணன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி:

அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகாமை ஆகியவை சார்பில் தேசிய மீன்வளர்ப்போர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

அமைச்சர் லட்சுமிநாராயணன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு சொந்தமான பாகூரில் அமைந்துள்ள மீன் குஞ்சு வளர்ப்பு மையத்தில் சீர்காழியில் அமைந்துள்ள மத்திய அரசின் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் மூலம் திலேப்பியா மீன் பொரிப்பகம் அமைப்பதற்க்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.

தொடர்ந்து, நன்னீர் மீன்வளர்ப்போரை ஊக்குவிக்கும் பொருட்டு சுமார் 20 மீன்வளர்ப்போருக்கு நன்னீரில் வளரக்கூடிய கொடுவா மற்றும் திலேபியா மீன் குஞ்சுகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.

முருங்கப்பாக்கம் மற்றும் தேங்காய்த்திட்டு சதுப்பு நிலக்காடுகளில் கல்நண்டு உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு சுமார் 1500 கல்நண்டு குஞ்சுகள் விடப்பட்டது. மேலும், உள்நாட்டு மீன்வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மத்திய அரசின் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் பற்றி விளக்கப்பட்டது.

இதில் செல்வகணபதி எம்.பி, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. , அரசுச் செயலர்கள் நெடுஞ்செழியன், ராகவன், மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி, இணை இயக்குநர் தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்வளர்ப்போர்கள் பங்குபெற்றனர். விழா ஏற்பாடுகளை துணை இயக்குநர கோவிந்த சாமி செய்திருந்தார்.

Tags:    

Similar News