முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்ற காட்சி.
முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 25-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் முதலா மாண்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 25-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கல்லூரியின் துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.
முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக கல்லூரியில் இயங்கிவரும் அப்துல் கலாம் மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் முதலாமாண்டு மாணவர்க ளுக்கு நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் முதலா மாண்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். முடியில் முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் நன்றி கூறினார்.