புதுச்சேரி

கோப்பு படம்

கட்டிடத்தில் இருந்து விழுந்து 2 தொழிலாளர்கள் காயம்

Published On 2022-06-18 10:00 IST   |   Update On 2022-06-18 10:00:00 IST
  • கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சாரம் சரிந்து விழுந்ததில் அண்ணன்-தம்பி படுகாயமடைந்தனர்.
  • இவருக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஒரு ஆண் கைக்குழந்தையும் உள்ளது.

புதுச்சேரி:

கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சாரம் சரிந்து விழுந்ததில் அண்ணன்-தம்பி படுகாயமடைந்தனர்.

பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியை சேர்ந்தவர் அஜித்(வயது30). இவருக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஒரு ஆண் கைக்குழந்தையும் உள்ளது. கட்டிடங்களில் படம் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்த (ஸ்தபதி) அஜித்தும், அவரது தம்பி அருண்குமாரும்(29) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேல் பட்டாம்பாக்கத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி நாராயணன் மூலம் புதுவை ரெயின்போ நகரில் முதல் குறுக்கு தெருவில் கட்டுமான வேலை நடந்து வரும் ஒரு வீட்டில் படம் அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அண்ணன்-தம்பி இருவரும் கட்டிடத்தில் சாரத்தில் நின்று படம் வரையும் வேலையில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்தது. இதில் அஜித்தும், அவரது தம்பி அருண்குமாரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். உடனே அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வேலை செய்யும் இடத்தில் சரியான பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தி கொடுக்காத கட்டிட மேஸ்திரி மற்றும் சூப்பர்வைசர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News