புதுச்சேரி

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

படுகை அணை அமைக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-16 14:45 IST   |   Update On 2022-12-16 14:45:00 IST
  • புதுவை செல்லிப்பட்டில் பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட படுகை அணை இருந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையில் செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்தது.
  • மணல் மூட்டைகளும் மழை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை செல்லிப்பட்டில் பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட படுகை அணை இருந்தது.

கடந்த ஆண்டு பெய்த மழையில் செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்தது. இதனால் மழை வெள்ளம் தேங்காமல் வெளியேறியது. தற்காலிகமாக சீரமைக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைத்தனர். மணல் மூட்டைகளும் மழை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது. வடகிழக்கு பருமழை காலத்திற்கு முன்பாக புதிதாக அணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

சமீபத்தில் பெய்த புயல், மழையாலும் தண்ணீர் தேங்காமல் வெளியேறது. இந்நிலையில் இன்று படுகை அணையில் நின்று அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய படுகை அணை அமைக்கும் பணியை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். படுகை அணை அமைக்க முடியாவிட்டால் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News