புதுச்சேரி

சுற்றுபுற தூய்மை விழிப்புணர்வு பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

சுற்றுபுற தூய்மை விழிப்புணர்வு பேரணி

Update: 2022-09-29 08:13 GMT
  • அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அதனைச் சார்ந்த 26 கிராமங்களில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது.
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனை அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அதனைச் சார்ந்த 26 கிராமங்களில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு நிகழ்வாக மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுபுற தூய்மை விழிப்புணர்வு பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனை அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மாநில செயலாளர் ரத்தினவேல், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம் , மோகன், மாயகிருஷ்ணன், ஹேமமாலினி, விஜி, செல்வி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News